ஸ்டெர்லைட் வழக்கு: வேதாந்தா நிறுவன கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்டு
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை விசாரிக்க கோரிய வேதாந்தாவின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
புதுடெல்லி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் வேதாந்தா முறையீடு செய்தது. ஏற்கனவே ஆக.22,23-ல் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில் அன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை விசாரிக்க கோரிய வேதாந்தாவின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. அரசியல் சாசன அமர்வு விசாரணை முடிந்த பின்னர் ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணை நடத்தப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.