அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 'தி.மு.க. உள்ளிட்ட மாநில கட்சிகள் முக்கியத்துவம் பெறும்' - அமர்தியா சென் கருத்து
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ‘தி.மு.க. உள்ளிட்ட மாநில கட்சிகள் முக்கியத்துவம் பெறும்’ என்று அமர்தியா சென் கருத்து தெரிவித்துள்ளார்.;
கொல்கத்தா,
நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்தியா சென், கொல்கத்தாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அடுத்த நாடாளுமன்ற தேர்தல், பா.ஜ.க.வுக்கு ஆதரவான ஒற்றை குதிரை பந்தயம் போல அமையும் என நினைத்தால் அது தவறு.
இந்தத் தேர்தலில் மாநிலக்கட்சிகள் முக்கியத்துவம் பெறும் என்பது தெளிவு. தி.மு.க. ஒரு முக்கியமான கட்சி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் உறுதியாக முக்கியமான கட்சி. சமாஜ்வாடி கட்சியும் சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நாட்டின் அடுத்த பிரதமர் ஆக முடியுமா என்று கேட்டால், அதற்கான திறன் அவருக்கு இருக்கிறது. ஆனால் பா.ஜ.க. வுக்கு எதிரான பொது அதிருப்தி சக்திகளை அவர் ஒருங்கிணைக்கும் வழியில் இழுக்க முடியுமா என்பது இன்னும் நிரூபணமாகவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.