முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்தது தவறா?; எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. கேள்வி
முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்தது தவறா என்று எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ.கேள்வி எழுப்பி உள்ளார்.;
பெங்களூரு:
கர்நாடக பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எஸ்.டி.சோமசேகர், சிவராம் ஹெப்பார் ஆகியோர் பா.ஜனதா கட்சி மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையாவை நேற்று முன்தினம் எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து பேசினார். இதன்மூலம் எஸ்.டி.சோமசேகர் காங்கிரசில் சேருவது உறுதி என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
என்னை காங்கிரசுக்கு வருமாறு சிலர் கூறினர். நான் அந்த கட்சியில் 20 ஆண்டுகள் இருந்தேன். சட்டசபை தேர்தலுக்கு முன்பே என்னை கட்சிக்கு வரும்படி அழைத்தனர். ஆனால் நான் செல்லவில்லை. நான் காங்கிரசுக்கு செல்ல இருப்பதாக சிலர் வேண்டுமென்றே தவறான தகவலை பரப்புகிறார்கள். எடியூரப்பா என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து பேசியது தவறா?.
இவ்வாறு எஸ்.டி.சோமேசேகர் கூறினார்.