பணமோசடி வழக்கு: முன்னாள் மந்திரி நவாப் மாலிக்கிற்கு ஜாமீன் மறுப்பு

பணமோசடி வழக்கில் மராட்டிய முன்னாள் மந்திரி நவாப் மாலிக்கிற்கு ஜாமீன் வழங்க மும்பை சிறப்பு கோர்ட்டு மறுத்து விட்டது.

Update: 2022-11-30 11:13 GMT

மும்பை,

நிழல் உலக தாவூத் இப்ராகிம் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி மராட்டியமுன்னாள் மந்திரி நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் உள்ள அவர், தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் சிறப்பு கோர்ட்டில் நவாப் மாலிக் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதில், தன் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்ததற்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நவாப் மாலிக் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாகத்துறை, "முன்னாள் மந்திரி நவாப் மாலிக் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அசீனா பார்க்கர் ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர் நிரபராதி என்ற கேள்விக்கே இடமில்லை" என தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், பணமோசடி வழக்கில் ஜாமீன் வழங்க கோரிய மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி ஆர்.என். ரோகடே, முன்னாள் மந்திரி நவாப் மாலிக்கிற்கு ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்