ஸ்பெயின் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

ஜார்க்கண்டில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 7 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.;

Update:2024-03-05 14:49 IST

ராஞ்சி,

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் தனது கணவருடன் ஆசியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இவர், கடந்த வாரம் இந்தியா வந்தார். இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தும்கா மாவட்டத்தில் குறுமுகத் என்ற பகுதிக்கு இருவரும் சுற்றுலா சென்றனர். அங்கு இரவு தற்காலிக கூடாரம் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது, 7 பேர் கொண்ட கும்பலால், அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அவரது கணவரையும் அந்த கும்பல் அடித்து காயப்படுத்திவிட்டுச் சென்றது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், வேதனையுடன் பேசி வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்து, மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர். வெளிநாட்டுக்கு தம்பதிக்கு ஏற்பட்ட இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கை ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்