சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோ தலைவருக்கு சோனியா காந்தி வாழ்த்து

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கியதற்காக இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-24 07:14 GMT

புதுடெல்லி,

சந்திரயான்-3வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில்,

"நேற்று மாலை இஸ்ரோவின் மகத்தான சாதனையால் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே இது. இது அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும் மிகுந்த பெருமையும், உற்சாகமும் அளிக்கும் விஷயமாகும்.

இஸ்ரோவின் சிறப்பான திறன்கள் பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன.  நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இதற்காக இஸ்ரோவுக்கு எனது பாராட்டுகள். நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கி வெற்றிகண்ட 4-ஆவது நாடு என்ற பெருமையை எட்டியுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்