ம.பி.யில் தந்தைக்கு பதில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய மகன் - போலீஸ் வழக்குப்பதிவு

தந்தைக்கு பதில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update:2024-09-15 17:00 IST

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் அன்னுபூர் மாவட்டத்தில் உள்ள சோல்னா பகுதியில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்றைய தினம் அன்னுபூர் ஊராட்சியின் முதன்மை செயல் அலுவலர் தன்மய் வசிஷ்ட் சர்மா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சமான் லால் கன்வர் பள்ளிக்கு வரவில்லை என்பதும், அவருக்கு பதிலாக அவரது மகன் ராகேஷ் பிரதாப் சிங் பள்ளியின் நிர்வாக பணிகளை கவனித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அங்குள்ள ஒரு ஆசிரியர் கூறுகையில், தலைமை ஆசிரியருக்கு உடல்நலம் சரியில்லாததால், அவர் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தலைமை ஆசிரியருக்கு பதிலாக அவரது இடத்தில் இருந்து பணி செய்து வந்த அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகளுக்கு தன்மய் வசிஷ்ட் சர்மா உத்தரவிட்டார். அதே போல், தலைமை ஆசிரியர் சமான் லால் கன்வர் மீதும் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்