சிலர் அமலாக்கத் துறை விசாரணைக்கு பயந்து கட்சி மாறிவிட்டனர் - அஜித் பவாரை மறைமுகமாக சாடிய சரத் பவார்

சிலர் அமலாக்கத் துறை விசாரணைக்கு பயந்து கட்சி மாறிவிட்டதாக தனது மருமகனான அஜித் பவாரை மறைமுகமாக சரத் பவார் சாடியுள்ளார்.

Update: 2023-08-20 17:55 GMT

Image Courtacy: ANI

புனே,

கடந்த மாதம் சிவசேனா-பாஜக அரசில் இணைந்த கிளர்ச்சி எம்எல்ஏக்கள் குழுவை வழிநடத்திய தனது மருமகன் அஜித் பவாரின் பெயரைக் குறிப்பிடாமல், சிலர் அமலாக்கத் துறை விசாரணைக்கு பயந்து கட்சி மாறிவிட்டதாக அஜித் பவாரை மறைமுகமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், "வளர்ச்சிக்கான காரணத்திற்காக ஆளும் அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறோம் என்று அவர்கள் கூறுவது உண்மையல்ல.. கடந்த காலங்களிலும் இது போன்ற மாற்றங்கள் இருந்திருக்கின்றன. எங்களது கட்சி உறுப்பினர்கள் சிலர் எங்களிடமிருந்து விலகி சென்றுள்ளனர்.

அவர்களுக்கு (அஜித் பவார் கோஷ்டி) எதிராக மத்திய அரசு அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டதால் அவர்கள் தேசியவாத காங்கிரசில் இருந்து விலகியுள்ளனர். அவர்கள் தேசிவாத காங்கிரசிலிருந்து விலகி இன்னொரு கட்சியுடன் (பாஜக) சேர அறிவுரை கூறப்பட்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் சேரவில்லையென்றால் வேறு ஏதேனும் இடத்துக்கு அனுப்பப்பட்டிருக்கலாம். ஆனால், சிலர் அமலாக்கத் துறை விசாரணையை எதிர்கொள்ள துணிந்தனர். முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் 14 மாதங்கள் சிறையில் இருந்தார். அவரை தேசியவாத காங்கிரசில் இருந்து விலக வலியுறுத்தியும் அவர் எங்களது கட்சியுடன் உறுதியோடு நின்றார்" என்று சரத் பவார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்