போதைப்பொருள் விற்ற நைஜீரியா வாலிபர் சிக்கினார்

போதைப்பொருள் விற்ற நைஜீரியா வாலிபர் சிக்கினார்

Update: 2022-06-29 16:56 GMT

பெங்களூரு: பெங்களூரு புலிகேசிநகர் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் நைஜீரியாவை சேர்ந்த நாஜி எமூயல் (வயது 23) என்று தெரிந்தது. இவர், ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை வாங்கி, அவற்றை கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு விற்று வந்தது தெரிந்தது.

அவரிடம் இருந்து ரூ.1¼ லட்சம் மதிப்பிலான 20 எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், ரூ.2 ஆயிரம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாஜி மீது புலிகேசிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்