போதைப்பொருட்கள் விற்ற உகாண்டா நாட்டு இளம்பெண்கள் 2 பேர் கைது

போதைப்பொருட்கள் விற்ற உகாண்டா நாட்டு இளம்பெண்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-09 21:28 GMT

பெங்களூரு: பெங்களூரு பானசாவடி போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக 2 வெளிநாட்டு பெண்கள் சுற்றித்திரிந்தனர். அவர்கள் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த பையை போலீசார் வாங்கி பார்த்த போது அதில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்கள் இருந்தது. இதனால் 2 பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் உகாண்டா நாட்டை சேர்ந்த நமுதேபி சமைரா(வயது 25), நன்புகா பியோனா என்கிற ஷாரிகா(27) என்பது தெரியவந்தது. தற்போது ஹெண்ணூரில் வசித்து வரும் 2 பேரும் உகாண்டாவில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி பெங்களூருவில் அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.

மேலும் விசா காலம் முடிந்தும் அவர்கள் 2 பேரும் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருந்ததும் தெரிந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் ரூ.1½ லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேர் மீதும் பானசாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்