ஒடிசா-ஆந்திராவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா மூட்டை, மூட்டையாக கடத்தல்

ஒடிசாவில் இருந்து ஆந்திர பிரதேசத்திற்கு ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருளை மூட்டை, மூட்டையாக கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-27 04:35 GMT

ஐதராபாத்,

ஆந்திர பிரதேசத்தில் ஏ.எஸ்.ஆர். மாவட்டத்தில் வாகனம் ஒன்றில் சட்டவிரோத வகையில் போதை பொருள் கடத்தப்படுகிறது என போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில், கஞ்சா வகையை சேர்ந்த போதை பொருளை அவர்கள் மூட்டைகளில் அடுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

ஒடிசாவில் இருந்து ஆந்திர பிரதேசத்திற்கு அவர்கள் 35 மூட்டைகளில் 901 கிலோ எடை கொண்ட கஞ்சாவை கடத்தியுள்ளனர். இதன் மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கர்ரி அப்பண்ணா, ஷெட்டி ராம்பாபு, ஷெட்டி சின்னாபாய் மற்றும் கொர்ரா நாராயணா ஆகியோர் என அடையாளம் காணப்பட்டனர். போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வேறு 3 பேருக்கு எதிராகவும் வழக்கு பதிவாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்