இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு
இமாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.0 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிம்லா,
இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3.39 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
குல்லுவில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.