உத்திரபிரதேசம்: லாரி மீது கார் மோதி விபத்து - 6 பேர் பலி
விபத்திற்கான காரணம் காரின் அதிவேகம் அல்லது டிரைவரின் கவனக்குறைவாக இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.;
லக்னோ,
உத்திரபிரதேசத்தில் டெல்லி-ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பூர்திராஹா என்ற இடத்தில் இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
டெல்லி மற்றும் மீரட்டில் உள்ள ஷாஹ்தாராவைச் சேர்ந்தவர்கள்ஹரித்வாருக்குச் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகவும் கார் முழுவதுமாக லாரிக்கு அடியில் சிக்கியதாகவும் விபத்திற்கான காரணம் காரின் அதிவேகம் அல்லது டிரைவரின் கவனக்குறைவாக இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விவரங்கள், டெல்லியை சேர்ந்த குணால் (23), சிவம் தியாகி (22), பராஸ் சர்மா (18), தீரஜ் (22) மற்றும் விஷால் (20), மற்றும் மீரட்டைச் சேர்ந்த அமன் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.