சிவமொக்கா மாநகராட்சி மேயர் தேர்தல் தேதி அறிவிப்பு; வருகிற 28-ந்தேதி நடக்கிறது

ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சிவமொக்கா மாநகராட்சி மேயர் தேர்தல் வருகிற 28-ந்தேதி நடக்கிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-10-19 18:45 GMT

சிவமொக்கா;


கர்நாடகத்தில் மாநகராட்சிகளில் சிவமொக்காவும் ஒன்று. சிவமொக்கா மாநகராட்சி பா.ஜனதா வசம் உள்ளது. இதற்கிடையே சிவமொக்கா மாநகராட்சியின் மேயர், துணை மேயர் தேர்தலில் போட்டியிட எந்த பிரிவினருக்கு ஒதுக்குவது குறித்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் சிவமொக்கா மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரு மண்டல தேர்தல் ஆணையர் ஆதித்ய பிஸ்வாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிவமொக்கா மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் வருகிற 28-ந்தேதி நடக்கிறது. இதில் மேயர் பதவி ஆண், எஸ்.சி.பிரிவுக்கும் மற்றும் துணை மேயர் பதவி பெண், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.

சிவமொக்கா மாநகராட்சி மேயர் பதவி தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கும்படி மாநகராட்சி முன்னாள் மேயர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதனால் இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மேயர் பதவி தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கே ஒதுக்கப்பட்டுள்ளதால் வரும் 28-ந்தேதி தேர்தல் நடத்த எந்த தடையும் இருக்காது என்று சிவமொக்கா மாநகராட்சி கமிஷனர் மாயண்ண கவுடா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மேயர், துணை மேயர் தேர்தலில் போட்டியிட பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

மேலும் செய்திகள்