சித்தராமையா, மக்களின் நாயகன்; காங். பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் பேச்சு

சித்தராமையா, மக்களின் நாயகன் என காங். பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் கூறியுள்ளார்.

Update: 2022-08-24 15:07 GMT

சிக்கமகளூரு;


கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல், சித்ரதுர்காவிற்கு நேற்றுமுன்தினம் மாலை வந்தார். அவரை, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆளுயர ஆப்பிள் மாலை போட்டு உற்சாகமாக வரவேற்றனர். இதையடுத்து அவர், கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை அவதூறாக பேசுவதை நிறுத்தி கொள்ளவேண்டும். அவரது சக்தியை பற்றி உங்களுக்கு தெரியாது. சித்தராமையா, ஏழை மக்களின் பசி தீர்க்க அன்னபாக்யா திட்டத்தை கொண்டு வந்தார். இந்திரா உணவகம் உட்பட அவரது ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வரப்பட்டது. சித்தராமையா, மக்களின் நாயகன்.

அவர் எங்கு சென்றாலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதை பா.ஜனதாவால் பொறுத்துகொள்ள முடியவில்லை. வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று பா.ஜனதாவுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும். சித்ரதுர்கா மாவட்டத்திற்கு பத்ரா கால்வாய் திட்ட தண்ணீரை கொண்டு வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய காங்கிரஸ் கட்சி முன்வருகிறது.

இந்த திட்டத்தை எடியூரப்பா தொடங்கி வைத்தாலும் அதன்பிறகு அந்த திட்டத்திற்கு சித்தராமையா தான் கூடுதல் நிதி ஒதுக்கி பணிகளை ஆரம்பித்தார். எனவே, சித்தராமையாவை சீண்டினால் காங்கிரஸ் சார்பில் அறப்போர் போராட்டம் நடப்பதற்கும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மந்திரி ஆஞ்சநேயா, முன்னாள் எம்.பி. சந்திரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்