வருணா சட்டசபை தொகுதியில் போட்டியிட சித்தராமையாவுக்கு காங்கிரஸ் உத்தரவு

கோலார் தொகுதியில் வெற்றி எளிதல்ல என்பதால், வருணா தொகுதியில் போட்டியிட சித்தராமையாவுக்கு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.;

Update:2023-03-19 03:01 IST

பெங்களூரு:

கோலார் தொகுதியில் வெற்றி எளிதல்ல என்பதால், வருணா தொகுதியில் போட்டியிட சித்தராமையாவுக்கு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்

கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் தற்போதில் இருந்தே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க ஆயத்தமாகி வருகிறது.

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக டெல்லியில் நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்கள். முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை யுகாதி பண்டிகைக்கு வெளியிட காங்கிரஸ் தயாராகி உள்ளது.

கோலாரில் போட்டியிடுவதாக அறிவிப்பு

இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது மட்டும் இன்னும் உறுதியாகாமல் இருக்கிறது. அதாவது கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி ஆகிய 2 தொகுதிகளில் சித்தராமையா போட்டியிட்டு இருந்தார். இதில், சாமுண்டீஸ்வரி தொகுதியில் அவர் தோல்வி அடைந்திருந்தாலும், பாதாமியில் வெற்றி பெற்றிருந்தார்.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாதாமியில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று சித்தராமையா கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே அறிவித்திருந்தார். மேலும் கோலார் தொகுதியில் போட்டியிட சித்தராமையா முடிவு செய்தார். இதற்காக கோலார் மாவட்டத்திற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்கு போட்டியிட்டால் வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியதால், கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக சித்தராமையா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.

வருணாவில் போட்டியிட காங்கிரஸ் உத்தரவு

இதனால் கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. சித்தராமையாவுக்கு ஆதரவாக கோலார் தொகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரத்தையும் தொடங்கி இருந்தனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் பிரிவு கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் சித்தராமையா எந்த தொகுதியில் போட்டியிட போகிறார்? என்பது குறித்து ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிரமாக விவாதித்தனர்.

அப்போது கோலாரில் போட்டியிட இருப்பது பற்றியும், வருணா தொகுதியில் தனது மகன் யதீந்திரா போட்டியிட இருப்பது பற்றியும் சித்தராமையா தெரிவித்துள்ளார். ஆனால் கோலார் தொகுதியில் போட்டியிட்டால், வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்றும், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தனியார் அமைப்புகள் மூலமாக நடத்திய ஆய்வில் தெரியவந்திருப்பதாகவும், கோலார் தொகுதி பாதுகாப்பானது இல்லை என்பதால், வருணா தொகுதியில் போட்டியிடும்படியும், அதுவே பாதுகாப்பானது என்றும் சித்தராமையாவிடம் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

சித்தராமையா குழப்பம்

இதே கருத்தை மற்ற தலைவர்களும் சித்தராமையாவிடம் கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனெனில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே தான் போட்டி உள்ளது. ஒருவேளை கோலாரில் போட்டியிட்டு சித்தராமையா தோல்வி அடைந்தால், அது அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்பதால், வருணா தொகுதியில் போட்டியிடும்படி சித்தராமையாவை ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதனால் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா எந்த தொகுதியில் போட்டியிடுவார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் மீண்டும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையின் உத்தரவால் சித்தராமையாவும் கடும் குழப்பத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

25-ந் தேதி அறிவிப்பு?

இதையடுத்து, பெங்களூருவில் நேற்று காலையில் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். ஆனால் காங்கிரஸ் மேலிட உத்தரவின் பேரில் வருணாவில் போட்டியிட்டால் தனது மகன் யதீந்திரா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

Tags:    

மேலும் செய்திகள்