கர்நாடக அரசியலில் அசைக்க முடியாத தலைவர்: பலத்தை நிரூபித்த சித்தராமையா...!

கர்நாடக அரசியலில் அசைக்க முடியாத தலைவர் என்பதை சித்தராமையா நிரூபித்துள்ளார்.

Update: 2022-08-03 21:20 GMT

பெங்களூரு:


கர்நாடக அரசியலில் அசைக்க முடியாத தலைவர் என்பதை சித்தராமையா நிரூபித்துள்ளார்.

பசவண்ணரின் கொள்கைகள்

கர்நாடக அரசியலில் தவிர்க்க முடியாத, அசைக்க முடியாத தலைவராக சித்தராமையா திகழ்கிறார். அவர் நேற்று 75-வது ஆண்டு பிறந்த நாளை கொண்டாடினார். தாவணகெரேயில் அவரது பிறந்த நாள் பவள விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். சித்தராமையா குருபா சமூகத்தை சேர்ந்தவா். ஆனால் அவர் அம்பேத்கர், பசவண்ணரின் கொள்கைகளை மிக தீவிரமாக வலியுறுத்தி வருகிறார். சிறுபான்மையினர்களான முஸ்லிம்களுக்கு ஆதரவாக அவர் எப்போதும் குரல் கொடுக்கிறார்.

இது மட்டுமின்றி கர்நாடகத்தில் லிங்காயத், ஒக்கலிகர், குருபா ஆகிய பெரிய சமூகங்களை தவிர இன்ன பிற சிறிய சமூகங்களுக்கு ஆதரவாகவும் அவர் குரல் எழுப்புகிறார். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது அனைத்து சமூகங்களுக்கும் அதிகாரத்தை பகிர்ந்து அளித்தார். அதாவது சமூகநீதியை உறுதி செய்து தனது மந்திரிசபையில் அனைத்து சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கினார். சில சமூகங்களுக்கு மந்திரிசபையில் இடம் வழங்க முடியாத நிலையில் வேறு சில அரசு பதவிகளை அந்த சமூகங்களுக்கு வழங்கி அவர்களின் மனதையும் வென்றார். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை உறுதி செய்தார்.

அசைக்க முடியாத தலைவர்

இவ்வாறு அனைத்து சமூகங்களையும் சமமாக பாவித்து அவர்களுக்கு உரிய அரசியல் அதிகாரத்தை வழங்கினார். இதன் மூலம் அவருக்கு சமத்துவவாதி என்ற அடைமொழியும் உண்டு. சித்தராமையா (அஹிந்தா) பிற்படுத்தப்பட்ட சமூங்கள், சிறுபான்மையின சமுகங்களின் தலைவராக கருதப்படுகிறார். ஜனதா தளத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினாலும், அக்கட்சியை விட்டு விலகி 15 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசில் சேர்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்