சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே ஊழல் வாதிகள்
சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே ஊழல் வாதிகள் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தொிவித்துள்ளார்.
உப்பள்ளி-
உப்பள்ளி விமான நிலையத்திற்கு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி பணம் வாங்கி கொண்டு வேட்பாளர்களை நியமிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. இதை அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் கவர்னர் ஒருவர் கூறியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாட்டில் லஞ்சம், ஊழல், சமூக விரோத செயல்கள் அதிகரித்து காணப்பட்டது. அதை மறந்துவிட்டு பா.ஜனதா மீது வீண் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். ஆனால் நேரு காலத்தில் இருந்தே காங்கிரசில் ஊழல் இருந்து வருகிறது. சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே ஊழல் வாதிகள்.
பிரதமர் மோடி முன்பு பா.ஜனதாவினர் நடுக்கத்துடன் நிற்பதாக கூறும் காங்கிரஸ் கட்சியினர் சோனியா, ராகுல்காந்தி முன்பு கை கட்டி நிற்கின்றனர். காங்கிரஸ் கட்சியினரை அவர்கள் கீழ் மட்டத்தில் வைத்துள்ளனர். இதை உணர்ந்து சித்தராமையா கண்ணியத்துடன் பேசவேண்டும். தங்களுக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு காங்கிரஸ் பதவி உயர்வு வழங்குகிறது. அந்த வகையில் மல்லிகார்ஜுன கார்கேவின் தந்தை காந்தி பரிவாரின் ஆசீர்வாதம் பெற்றவர். அதனால் தான் அவருக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் வரலாற்றில் இடம் பிடித்துவிடுவோம் என்று கனவு காண்கிறார். ஆனால் அது பழிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.