காங்கிரஸ் கட்சியின் 5 தேர்தல் வாக்குறுதிகளுக்கு கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல்
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் 5 தேர்தல் வாக்குறுதிகளுக்கு கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி, வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ2,000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தது. இதற்கு பெரும் வரவேற்பு இருந்தது.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதல் மந்திரியாக பதவியேற்ற சித்தராமையா, 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டார்.
இந்த நிலையில், சித்தராமையா தலைமையில் கர்நாடகா மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் இத்திட்டங்களை செயல்படுத்த ரூ50,000 கோடி செலவாகும் எனவும் கர்நாடகா மந்திரி கூட்டம் மதிப்பீடு செய்துள்ளது