சித்தராமையா, டி.கே.சிவக்குமார் தனித்தனி யாத்திரை தொடங்கினர்

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் தனித்தனியாக பஸ் யாத்திரையை தொடங்கியுள்ளனர்.

Update: 2023-02-03 20:48 GMT

பெங்களூரு:-

தனித்தனி யாத்திரை

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் த்தராமையா ஆகியோர் கூட்டாக மக்கள் குரல் யாத்திரை மேற்கொண்டனர். அவா்கள் மாவட்ட தலைநகங்களில் பொதுக்கூட்டம் நடத்தினர். இந்த யாத்திரை முடிவடைந்த நிலையில் அவர்கள் 2 பேரும் தனித்தனியாக மக்கள் குரல் பஸ் யாத்திரையை நேற்று தொடங்கினர். அவர்கள் சட்டசபை தொகுதி வாரியாக சென்று பொதுக்கூட்டங்களை நடத்தி காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் மற்றும் மத்திய-மாநில அரசுகளின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துக்கூற உள்ளனர். அவர்கள் தினமும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பஸ்களில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

சித்தராமையா பீதரில் இருந்தும், டி.கே.சிவக்குமார் கோலார் மாவட்டம் முல்பாகலில் இருந்தும் யாத்திரையை தொடங்கியுள்ளனர். சித்தராமையா வட கர்நாடகத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். டி.கே.சிவக்குமார் தென் கர்நாடகத்தில் உள்ள தொகுதிகளுக்கு சென்று காங்கிரசுக்கு ஆதரவு திரட்டுகிறார். இந்த பயணத்திற்காக தனித்தனியாக 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பஸ்சில் ஏற மறுத்தார்

முல்பாகலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த தலைவர் கே.எச்.முனியப்பா கலந்து கொண்டார். அவர் டி.கே.சிவக்குமாரின் பஸ்சில் ஏற மறுத்தார். அவரை வலுக்கட்டாயமாக பஸ்சில் ஏற்றி அழைத்து சென்றனர். அப்போது, அவரது ஆதரவாளர்கள், எங்கள் தலைவரை புறக்கணிக்க கூடாது என்று குரலை உயர்த்தி பேசினர். இதன் மூலம் கே.எச்.முனியப்பாவுக்கு அதிருப்தி இருப்பது வெளிப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்