பத்மஸ்ரீ விருது பெற்ற கமலா பூஜாரி நடனமாட வற்புறுத்திய சமூக ஆர்வலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
உடல்நிலை சரியில்லாத பத்மஸ்ரீ விருது பெற்ற கமலா பூஜாரியை நடனமாட வற்புறுத்திய சமூக ஆர்வலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பபட்டு உள்ளது.
புவனேஸ்வர்:
பத்மஸ்ரீ விருது பெற்ற கமலா பூஜாரியை கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்பு கட்டாயப்படுத்தி நடனமாட கூறிய சமூக சேவகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஒடிசாவில் உள்ள பராஜா பழங்குடியின சமூகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு மருத்துவமனையின் ஐசியூவில் வயதான பெண் நடனமாடும் வீடியோ வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.சமூக சேவகர் மம்தா பெஹராவும் அவருடன் நடனமாடினார்.
சிறுநீரகக் கோளாறு காரணமாக கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி= மருத்துவமனையில் கமலா பூஜாரி அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் விரைவில் குணமடைய முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலை அவரி சந்திக்க சமூக ஆர்வலர் மம்தா பெஹரா அவருடன் சேர்ந்து நடனமாடினார் இந்த வீடியோ வைரலானது.
திங்கட்கிழமை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து கம்லா பூஜாரி கூறும் போது
"நான் ஒருபோதும் நடனமாட விரும்பவில்லை, ஆனால் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் பலமுறை மறுத்தேன், ஆனால் அவர் (பெஹெரா) கேட்கவில்லை. நான் உடல்நிலை சரியில்லாமல் சோர்வடைந்தேன்," என்று பூஜாரி கூறினார்.
சமூக சேவகர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், பழங்குடியினர் சமூகத்தின் சங்கமான 'பராஜா சமாஜா போராட்ட்த்தில் குதிக்கும் என அதன் தலைவர் ஹரிஷ் முதுலி கூறினார்.
இயற்கை விவசாயத்தை ஊக்குவித்ததற்காகவும், நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களின் 100 க்கும் மேற்பட்ட நாட்டு விதைகளைப் பாதுகாத்ததற்காகவும் 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர் கமலா பூஜாரி.
பூஜாரி ஐசியூவில் அல்லாமல் சிறப்பு கேபினில்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெஹெரா, தனது இந்த செயலுக்குப் பின்னால் தனக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை என்றும், "பூஜாரியின் சோம்பேறித்தனத்தைத் தவிர்க்க விரும்புபியதாகவும் கூறினார்.
பூஜாரி ஒடிசாவின் ஒரு பெரிய பட்டியல் பழங்குடியினரான பராஜா சமூகத்தைச் சேர்ந்தவர், இது மாநிலத்தின் பழங்குடி மக்கள்தொகையில் சுமார் 4 சதவீதத்தைக் கொண்டுள்ளது.