பெண்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரம்: வட இந்தியர்களின் மனநிலை சரியாக இல்லை - சரத்பவார் விலாசல்

மக்களவை மற்றும் சட்டசபை தெர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் வட இந்தியாவின் மனநிலை ஒத்துழைக்கவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

Update: 2022-09-18 05:48 GMT

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவராக உள்ள சரத் பவார். நாட்டின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார். பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் திரட்டும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒரே அணியில் எதிர்க்கட்சிகள் இணைந்தால், சரத் பவார் அல்லது நிதிஷ்குமார் போன்ற மூத்த தலைவர்கள் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், புனே டாக்டர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அவரது மகள் சுப்ரியா சூலே எம்பி உடன் சரத் பவார் கலந்து கொண்டார். அங்கு நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகக் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த சரத் பவார்,

இட ஒதுக்கீடு மசோதா இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இது பெண்களை ஏற்றுக்கொள்ள நாடு இன்னும் மனதளவில் தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது. நான் காங்கிரஸ் மக்களவை எம்.பி.யாக இருந்தது முதலே இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவாகக் குறித்துப் பேசி வருகிறேன். ஆனாலும் இன்னும் இந்த மசோதா நிறைவேறவில்லை.

நாடாளுமன்றத்தில் குறிப்பாக வட இந்தியர்களின் மனநிலை (இந்த விவகாரத்தில்) சரியாக இல்லை. நான் காங்கிரசில் மக்களவை எம்.பி.யாக இருந்தபோது, ​​நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்துப் பேசியது நினைவில் உள்ளது. ஒருமுறை எனது உரையை முடித்துவிட்டுத் திரும்பிப் பார்த்தேன். எனது கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையான எம்.பி.க்கள் கூட அங்கு இல்லை. அவர்கள் கூட எழுந்து சென்றுவிட்டனர். அதாவது எனது கட்சியைச் சேர்ந்தவர்களுக்குக் கூட பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பதை ஜீரணிக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்