பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்கவில்லை..!

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டத்தில் சரத் பவார் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-07-17 05:37 GMT

பெங்களூரு,

எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த முதல் கூட்டம் ஜூன் 23-ந் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெங்களூர் நகரத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 24 தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

2 நாள் ஆலோசனை கூட்டத்தின் முதல் நாளான இன்று அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் விருந்தும், நாளை ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது.

மகராஷ்டிரா சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் இரண்டாவது எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சரத்பவார் கலந்துகொள்ளமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

மகராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து ராஜ்பவனில் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களான சகன் புஜ்பால், தனஞ்செய் முண்டே, அதீதி தட்காரே, ஹசன் முஷ்ரிப், உள்ளிட்ட 8 பேர் அமைச்சரவையில் இணைந்தார். இதனால் மகராஷ்டிரா அமைச்சரவையில் மாற்றம் ஏற்ப்பட்டது.

இந்நிலையில் மகராஷ்டிரா அமைச்சரவையில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ள நிலையில் கூடும் முதல் சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் என்பதால் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடக்கும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் சரத் பவாரும், சுப்ரியா சுலேவும் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்