கணவர் வாங்கிய கடனை தரக்கோரி பாலியல் தொல்லை அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை முயற்சி

கணவர் வாங்கிய கடனை தரக்கோரி பாலியல் தொல்லை கொடுத்ததால், அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றார்.;

Update:2022-09-03 21:06 IST

சிவமொக்கா;


ரூ.20 ஆயிரம் கடன்

சிவமொக்கா டவுன் தொட்டபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவர் சிவமொக்கா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் கடந்த ஆண்டு (2021) உடல் நல குறைவினால் உயிரிழந்தார். பாரதியின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அசோக் என்பவரிடம் வட்டிக்கு கடனாக ரூ.20 ஆயிரம் வாங்கி இருந்தார்.

அந்த கடனை பாரதியின் கணவர் முழுவதுமாக கட்டுவதற்குள் இறந்து போனார். இதையடுத்து வாங்கிய கடனை முழுவதுமாக பாரதியின் கணவர் கட்டாமல் இறந்து போனதால், அந்த பணத்தை பாரதியிடம் அசோக் கேட்டு மிரட்டி வந்ததாக தெரிகிறது.

பாலியல் தொல்லை

இது மட்டும் அல்லாமல் அசோக், பாரதியிடம் பணத்தை கேட்பது போல் பாலியல் ெதால்லையும் கொடுத்து வந்துள்ளார். மேலும் சில நேரங்களில் பாரதியை, அசோக் பலாத்காரம் செய்யவும் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி அசோக், தனது நண்பர் களான நிகில், சந்திரம்மா மற்றும் லதா ஆகியோரை அனுப்பி பாரதியிடம் பணம்கேட்டு காலணியால் அடித்து உள்ளனர்.

தற்கொலை முயற்சி

இதனால் பாரதி மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து வீட்டில் வைத்து விஷத்தை குடித்தார். இதுகுறித்து அவரை அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு சிவமொக்கா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் இதுகுறித்து சிவமொக்கா மகளிர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அசோக், நிகில், சந்திரம்மா மற்றும் லதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்