மின் திட்ட தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி
மின் திட்டம் மேற்கொள்ள தொழிலாளர்கள் வாகனத்தில் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் கிஷ்ட்வர் மாவட்டம் டஷன் பகுதியில் மின் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மின் திட்ட பணியை மேற்கொண்டு வரும் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை 8 மணியளவில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 தொழிலாளார்கள் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.