காஷ்மீரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
சாலையோரமாக சக்தி வாய்ந்த வெடிகுண்டு கிடந்ததை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்தனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சாலையோரமாக சக்தி வாய்ந்த வெடிகுண்டு கிடந்ததை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக அதை பறிமுதல் செய்த பாதுகாப்பு படை வீரர்கள் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களை வரவழைத்து, அதை பத்திரமாக செயலிழக்க செய்தனர்.
இதன் மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.