மக்களவையில் இன்று நடந்தது பாதுகாப்பு மீறல்தான்.. கார்த்தி சிதம்பரம் பேட்டி
பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் வந்தவர்களில் ஒருவர் சபாநாயகரின் இருக்கையை நோக்கி செல்ல முயன்றார்.;
புதுடெல்லி:
நாடாளுமன்ற மக்களவைக்குள் பாதுகாப்பை மீறி 2 பேர் நுழைந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் உள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் மக்களவையில் குதித்தனர். அவர்கள் இருவரும் ஏதோ குப்பிகள் வைத்திருந்தார்கள். அந்த குப்பிகளில் இருந்து மஞ்சள் நிற புகை வெளிப்பட்டது. அந்த புகையானது நச்சுத்தன்மை வாய்ந்தது.
உள்ளே வந்தவர்களில் ஒருவர் சபாநாயகரின் இருக்கையை நோக்கி செல்ல முயன்றார். முழக்கங்களும் எழுப்பினார்.
2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பாராளுமன்றம் தாக்கப்பட்டது. அதே தினத்தில் நடந்த இந்த சம்பவம் கடுமையான பாதுகாப்பு மீறலாகும்.
இவ்வாறு கூறினார்.