லைவ் அப்டேட்ஸ்: குஜராத் தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு

குஜராத் சட்டப்பேரவைக்கு 2-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு 93- தொகுதிகளில் நடைபெற்றது.

Update: 2022-12-05 02:36 GMT

அகமதாபாத்,

நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில தேர்தல் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அங்குள்ள 182 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 இடங்களுக்கு கடந்த 1-ந்தேதி தேர்தல் நடந்து முடிந்தது. 2-வது மற்றும் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.

Live Updates
2022-12-05 11:17 GMT

குஜராத் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 50.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு விவரம்:-

பனஸ்கந்தா - 55.74%

படான் - 51.05%

மகேசனா - 51.54%

சபர்கந்தா - 57.24%

அர்வல்லி - 54.26%

காந்திநகர் - 52.33%

அகமதாபாத் - 44.44%

ஆனந்த் - 54.08%

கெடா - 54.07%

மஹிசாஹர் - 48.58%

பஞ்சமஹால் - 53.85%

தாஹொத் - 46.38%

வதோதரா - 50.37%

சோட்டாடேபூர் - 54.39%

2022-12-05 08:18 GMT

குஜராத் சட்டமன்ற 2-வது கட்ட தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி 34.74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.



2022-12-05 08:11 GMT



2022-12-05 07:19 GMT

குஜராத் சட்டசபை தேர்தலில் முதல்வர் பூபேந்திர படேல் வாக்களித்தார்.. இந்தத் தேர்தலில் பாஜக தனது பழைய சாதனைகளை முறியடித்து மாபெரும் வெற்றி பெறும் என பூபேந்திர படேல் நம்பிக்கை

2022-12-05 05:50 GMT

குஜராத்தில் மாற்றத்தை நாங்கள் கொண்டு வருவோம். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். குஜராத் மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டும். குஜராத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக உங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என்று தனது ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

2022-12-05 05:28 GMT

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது மகனும் பிசிசிஐ செயலருமான ஜெய்ஷாவுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அகமதாபாத்தின் நரன்புரா பகுதியில் உள்ள ஏ.எம்.சி மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் அமித்ஷா ஓட்டு போட்டார்.

2022-12-05 05:09 GMT

இன்று காலை 9 மணி நிலவரப்படி 4.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காந்திநகரில் 7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 



2022-12-05 04:52 GMT

குஜராத்தில் காலை 9 மணி வரை 4.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு -

அகமதாபாத் - 4.20%

ஆனந்த் - 4.92%

அர்வல்லி - 4.99%

பனஸ்கந்தா - 5.36%

சோட்டாடேபூர் - 4.54%

தாஹோத் - 3.37%

காந்திநகர் - 7.05%

கெடா - 4.50%

மகேசனா - 5.44%

மஹிசாகர் - 3.76%

பஞ்சமஹால் - 4.06%

படான் - 4.34%

சபர்கந்தா - 5.26%

வதோதரா - 4.15%

2022-12-05 04:51 GMT

அகமதாபாத் நகரில் உள்ள பள்ளியில் பிரதமர் மோடி வாக்குசாவடி மையத்திற்கு சென்று வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது:-

குஜராத், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் டெல்லி மக்களால் ஜனநாயக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

தேர்தலை அமைதியாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்