ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட பள்ளி மாணவர்கள் - பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு

கேரளாவில் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-10-30 09:03 GMT

இடுக்கி,

கேரளாவில் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழா பேருந்து நிலையத்தில் இரு கோஷ்டியைச் சேர்ந்த மாணவர்கள் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இது குறித்து அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் கூறும்போது, பேருந்து நிலையத்தில் போதைபொருட்கள் விற்கப்படுவதாகவும், அதுதொடர்பாக ஏற்படும் பிரச்னைதான் மாணவர்களின் இந்த மோதலுக்கு காரணம் என்று கூறினர்.

மேலும் மாணவர்கள் அடிக்கடி மோதிக்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்