ரூ.150 கோடி முறைகேடு புகார்; பெண் அதிகாரி பிடிபட்டார்

ரூ.௧௫௦ கோடி ஊழல் புகாரில் பெண் அரசு அதிகாரி போலீசாரிடம் சிக்கினார்.

Update: 2022-06-16 20:32 GMT

பெங்களூரு


கர்நாடகத்தில் போவி மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வருபவர் லீலாவதி. கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து கடந்த ஆண்டு(2021) வரை சமூக நலத்துறை சார்பில் உத்தமசீலதா என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த நிதியை போவி மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வரும் லீலாவதி, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பியும், சிலருக்கு கூடுதலாக நிதி ஒதுக்கியும், போலி ஆவணங்களை வழங்கியும் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது.


இதுதொடர்பாக பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசில், கோலார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து லீலாவதி வீட்டில் சோதனை நடத்தினர். இந்த நிலையில், முறைகேடு குறித்து உரிய ஆவணங்களும், விளக்கமும் அளிக்கும்படி லீலாவதிக்கு ஊழல் தடுப்பு படை போலீசார் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் அவர் ஆவணங்களை வழங்கவில்லை. விளக்கமும் அளிக்கவில்லை. இதையடுத்து லீலாவதியை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்