எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழக்கு: நவம்பர் 1-ம் தேதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நவம்பர் 1ம் தேதி நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

Update: 2022-09-07 12:07 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட வரம்பு இருக்கின்றது. இந்த இட ஒதுக்கீடு ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது அமலில் இருக்கும் இட ஒதுக்கீடு முறை 2030 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த செயல்படுத்தப்படும் அரசியல் சாசனப் பிரிவு 330- 334 ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் பல ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் சந்திர சூட், எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி, ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கியஅமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்கள் அனைத்தும் நவம்பர் 1-ம் தேதி விசாரணைக்கு பட்டியல் இடப்படும் என நீதிபதிகள், அறிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்