ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது சுபைருக்கு இடைக்கால ஜாமின் - சுப்ரீம் கோர்ட்டு

மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக உ.பி.யில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இடைக்கால ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-07-20 11:35 GMT

புதுடெல்லி,

ஆல்ட் நியூஸ்' எனும் இணை நிறுவனர் முகமது சுபைர். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மத உணர்வை தூண்டியதாக கடந்த ஜூன் 27 ம் தேதி முகமது ஜுபைரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.அதன்பிறகு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே தான் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முகமது ஜுபைர் மீது சீதாபூர் போலீசார் மற்றொரு வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். ஜூலை 4-ம் தேதி முகமது ஜூபைர் வழக்கு தொடர்பாக சீதாபூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சீதாபூர் போலீசார் பதிவு செய்த வழக்கில் கடந்த 8ம் தேதி அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு 5 நாள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும் டுவிட்டரில் கருத்து பதிவிடக்கூடாது என நிபந்தனை விதித்தது.ஆனால், இந்த உத்தரவு டெல்லி போலீசாரின் வழக்குக்கு பொருந்தாது என கூறப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.

மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக உ.பி.யில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி முகமது சுபைர் தாக்கல் செய்த மனு நேற்று முன்தினம் அவசர விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறுகையில், ஒவ்வொரு முறை அவர் ஜாமீன் பெறும் தருணத்தில், புதிய எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்படுவதாக தெரிகிறது. உ.பி.யில் அவர் மீதான ஆறாவது வழக்கில் அவருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஹத்ராஸ் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீதான வழக்குகளில் விசாரணை, வரும் புதன்கிழமை நடைபெறும். அதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று உத்தரப் பிரதேச காவல்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

இந்த வழக்கில் உத்தர பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலும் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக முகமது சுபைர் மீது உத்தர பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து எப்.ஐ.ஆர்.களையும் டெல்லிக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

மேலும், முகமது சுபைருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவையும் கலைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முகமது சுபைர் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரலாம் என நீதிபதி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்