தங்க நகை பரிசு விழுந்திருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.3½ லட்சம் அபேஸ்

தங்க நகை பரிசு விழுந்திருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.3½ லட்சம் அபேஸ் செய்யபட்டுள்ளது.

Update: 2023-05-30 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளி நாட்டில் இருந்து வாட்ஸ் அப் செயலிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. உங்கள் செல்போன் எண்ணிற்கு தங்க நகைகள் பரிசாக விழுந்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த அந்த பெண், குறுந்தகவல் வந்த வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், இளம் பெண்ணிடம் உங்களுக்கு தங்க நகைகள் பரிசாக விழுந்துள்ளது. அந்த நகையை பெறவேண்டும் என்றால், சேவை மற்றும் சுங்க வரியாக ரூ.3½ லட்சம் செலுத்தவேண்டும் என்று கூறினார். மேலும் பணம் அனுப்பவேண்டிய வங்கி விவரங்களையும் வாட்ஸ் அப் வாயிலாக அனுப்பி வைத்திருந்தார். இதை பார்த்த அந்த பெண், தங்க நகை பரிசாக கிடைக்கிறது என்ற சந்தோஷத்தில் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.3½ லட்சத்தை அனுப்பி வைத்தார்.

அந்த பணத்தை எடுத்து கொண்ட மர்ம நபர் பின்னர் பெண்ணை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெண், அந்த நபரை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெண், சிவமொக்கா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்