சவுக்கு சங்கர் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரணையில் இருந்து விலகல்

சவுக்கு சங்கர் தாயார் செய்த மேல் முறையீடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

Update: 2024-07-11 03:18 GMT

புதுடெல்லி,

பெண் போலீசார் பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இதை எதிர்த்து அவரது தாயார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் அவரது தாயார் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த்குமார் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது, விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், தான் இடம்பெறாத அமர்வு முன் இந்த மேல்முறையீட்டு மனுவை பட்டியலிட தலைமை நீதிபதிக்கு கோப்பை அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்