பூரி கடற்கரையில் அமைதி கோரும் புனித வெள்ளிக்கான மணல் சிற்பம்..!
பூரி கடற்கரையில் அமைதி கோரும் புனித வெள்ளிக்கான மணல் சிற்பம் படைக்கப்பட்டுள்ளது.
பூரி,
ஏசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையில், கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகின்றனர். இந்த தவக்காலத்தின் கடைசி வாரம், புனித வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஏசு சிலுவையில் அறையப்பட்டது மற்றும் அவர் சிலுவையில் அனுபவித்த பாடுகளை எடுத்துக்கூறும் நிகழ்வாக புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.
புனித வெள்ளியை முன்னிட்டு பிரபல மனற்சிற்பி சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் அமைதி கோரும் புனித வெள்ளிக்கான மணல் சிற்பத்தை படைத்துள்ளார்.