சனாதனத்தை இழிவுபடுத்துவதா..? டெல்லியில் சாமியார்கள் ஆர்ப்பாட்டம்

சனாதனத்தை இழிவுபடுத்துகின்றனர் என்று கூறி டெல்லியில் சாமியார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-09-25 19:03 GMT

Image Courtacy: ANI

புதுடெல்லி,

அரசியல் தலைவர்கள் சிலர் தங்களது அரசியல் லாபத்துக்காக சனாதன தர்மத்தை இழிவுபடுத்துகிறார்கள் என்று கூறி, அதனைத் தடுப்பதற்கு இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சனாதன தர்ம ரட்சா மஞ்ச் என்கிற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அமைப்பின் சார்பில் டெல்லி சாணக்கியபுரி அருகே சரோஜினிநகர் போக்குவரத்துக்கழக பணிமனை முன் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. அங்கிருந்து போராட்டக்காரர்கள், அருகில் உள்ள தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்துக்கு சென்று முற்றுகையிட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு குழுமியிருந்தனர்.

அதை முன்னிட்டு அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இரும்பு தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டன. இதனால் தமிழ்நாடு இல்லம் செல்ல முடியாததால் போராட்டக்காரர்கள் அந்த பகுதியிலேயே ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷமிட்டனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் சாமியார்கள் பலர் கலந்துகொண்டனர். பெண் சாமியார்களும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தின்போது, சனாதன எதிர்ப்பாளர்கள் சிலரின் உருவப்பொம்மைகள் கொளுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்