சாளுமரத திம்மக்கா உடல்நலம் பற்றி வதந்தி

சாளுமரத திம்மக்கா உடல் நலம் குறித்து வதந்தியை நம்பவேண்டாம் என்று வளர்ப்பு மகன் கூறியுள்ளார்.

Update: 2023-10-05 18:45 GMT

பெங்களூரு:-

கர்நாடக மாநிலம் துமகூருைவ சேர்ந்த சாளுமரத திம்மக்கா சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. தற்போது இவர் கர்நாடக அரசின் சுற்றுச்சூழல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூரு ஜெயநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கழிவறையில் வழுக்கி விழுந்து முதுகு எலும்பு முறிந்தது. அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா பல்லூரில் உள்ள தனது வளர்ப்பு மகன் உமேஷ் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சளி, மூச்சுத்திணறல் தொல்லையால் அவதிப்பட்டார். உடனே அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரது உடல் நலம் பற்றி வதந்தி பரவியது. இதை மறுத்துள்ள அவரது வளர்ப்பு மகன் உமேஷ், தீவிர சிகிச்சை பிரிவில் சாளுமரத திம்மக்கா சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு உணவு ஊட்டிய வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். அதாவது சாளுமரத திம்மக்கா உடல் நலம் பற்றிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் முன்னேற்றம் கண்டு வருகிறது. எனவே வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்