கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினேன்: ஜெகதீஷ் ஷெட்டர்

கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினேன் என்று ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

Update: 2023-04-23 12:03 GMT

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாக்பூரில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வந்தாலும் என்னை தோற்கடிக்க முடியாது. அவர்களுக்கு உள்ளூர் மக்களின் மனநிலை, இங்குள்ள சூழ்நிலை என்னவென்று தெரியாது. மக்களிடம் இருந்து அவர்களுக்கு ஆற்றும் பணி தான் ஒருவரின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தும். ராகுல் காந்தி என்னுடன் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். பா.ஜனதாவில் லிங்காயத் சமூக தலைவர்கள் ஓரங்கப்படுவது மற்றும் அதன் உள் விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.

ஹானகல் நகரில் நடைபெறும் காங்கிரசின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வரும்படி ராகுல் காந்தி எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். வட கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்யுமாறு எனக்கு அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து என்னுடன் ஆலோசித்து சுற்றுப்பயண திட்டத்தை வெளியிடுவதாக கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார். உப்பள்ளியிலும் ராகுல் காந்தி பிரசாரம் செய்ய உள்ளார்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்