ஆர்.எஸ்.எஸ். சீருடையை எரிப்பதா?; காங்கிரசுக்கு சி.டி.ரவி எம்.எல்.ஏ. கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். சீருடையை எரித்து போராட்டம் நடத்தும் காங்கிரஸ் கட்சியினருக்கு சி.டி.ரவி எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-07 14:42 GMT

சிக்கமகளூரு;

சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி

கா்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடையை தீவைத்து எரித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி, சிக்கமகளூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கண்டனம்

கர்நாடகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்.எஸ்.எஸ். சீருடையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். சீருடையை எரிப்பதற்கு பதிலாக எங்களது பழைய உடையை தருகிறோம் அதனை தீவைத்து எரியுங்கள். காங்கிரஸ், பொதுமக்களுக்கு நல்லது செய்யக்கூடிய கட்சி இல்லை. எப்போதும் மக்கள் காங்கிரசை நம்பமாட்டார்கள்.

சித்தராமையா, குமாரசாமி சாதி அரசியல் செய்து வருகிறார்கள். ஆனால் பா.ஜனதா எப்போதும் சாதி அரசியல் செய்தது கிடையாது. காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கரை அவமதித்தனர். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் போன்று பா.ஜனதா குடும்ப அரசியல் செய்யவில்லை.

பா.ஜனதாவில் அடிமட்ட தொண்டரும் உயர் பதவியை அடையலாம். பா.ஜனதாவில் தான் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்