நிலம் கையகப்படுத்த 3-ம் கட்டமாக ரூ.75 கோடி நிதி விடுவிப்பு

மைசூரு விமான நிலைய ஓடுபாைத விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்த 3-ம் கட்டமாக ரூ.75 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதாப் சிம்ஹா எம்.பி. தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-28 18:45 GMT

மைசூரு

மைசூரு விமான நிலையம்

மைசூரு மண்டஹள்ளி பகுதியில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பெங்களூரு, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மைசூரு விமான நிலையத்தை மேம்படுத்தவும், ஓடுபாதையை விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மாநில அரசு மற்றும் மைசூரு விமான நிலையம் இணைந்து மைசூரு விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்கம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிக்கு நிதியும் ஒதுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டு வரும் நிலத்துக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

ரூ.75 கோடி விடுவிப்பு

இந்த பணிகளுக்கு அரசு சார்பில் ரூ.319 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நிலம் கையகப்படுத்த முதல் கட்டமாக ரூ.50 கோடியும், 2-வது கட்டமாக ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிக்காக 3-வது கட்டமாக ரூ.75 கோடி நிதியை மாநில அரசு விடுவித்துள்ளது.

இதுகுறித்து மைசூரு- குடகு தொகுதி எம்.பி. பிரதாப் சிம்ஹா கூறுகையில், மைசூரு விமான நிலைய ஓடுபாதை விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு 3-ம் கட்டமாக ரூ.75 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நிலம் கையகப்படுத்தும் பணி விரைந்து மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்