ஆம்னி பஸ் உரிமையாளரிடம் ரூ.14¾ லட்சம் 'அபேஸ்'; ஊழியருக்கு வலைவீச்சு

உடுப்பியில், ஆம்னி பஸ் உரிமையாளரிடம் ரூ.14¾ லட்சம் ‘அபேஸ்' செய்த ஊழியரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-07-18 15:33 GMT

மங்களூரு;

போலீசில் புகார்

உடுப்பி மாவட்டம் பங்களாகுட்டே குக்குந்தூரை சேர்ந்தவர் ருடால்ப் டிசோசா. தொழிலதிபரான இவர், ஆம்னி பஸ்கள் உரிமையாளர் ஆவார்.

இந்த நிலையில் ருடால்ப் டிசோசா, உடுப்பி டவுனில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.

ரூ.14¾ லட்சம் அபேஸ்

அந்த புகாரில், நான் ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் ரெயி்ல் மற்றும் பஸ் போக்குவரத்து பயணத்திற்காக முன்பதிவுக்கான அடையாள அட்டை பெற்றிருந்தேன்.

ஆனால் எனது நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றுபவர், எனக்கு தெரியாமல் அடையாள அட்டை மற்றும் ரகசிய குறியீடுகளை தெரிந்துக்கொண்டு ரூ.14¾ லட்சத்தை எடுத்து மோசடி செய்துள்ளார்.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து வாங்கிய பணத்தை திருப்பி தரும்படி தெரிவித்தனர். ஆனால் அந்த பணத்தை நான் பெறவில்லை.

அப்போது தான் ஊழியர், எனக்கு தெரியாமல் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொண்டு ரூ.14¾ லட்சம் எடுத்து 'அபேஸ்' செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.

எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திருப்பி பெற்றுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரை பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்