போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து 2 நாட்களில் ரூ.14 கோடி அபராதம் வசூல்

பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து 2 நாட்களில் ரூ.14 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.;

Update:2023-02-06 00:15 IST

பெங்களூரு:

பெங்களூருவில் லட்சக்கணக்கான வாகனங்கள் ஓடுகின்றன. அதே நேரத்தில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம்பிடித்து காட்டுகிறது. அதன்மூலமும் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் வீடுகளுக்கு அபராத கடிதம் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறாக அபராதம் விதித்தும் லட்சக்கணக்கானோர் இன்னும் அபராத தொகையை செலுத்தாமல் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கர்நாடக அரசு மற்றும் போலீசார் இணைந்து அபராத தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாகவும், இந்த தள்ளுபடி வருகிற 11-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இச்சலுகை அமலுக்கு வந்து 2 நாட்களில் ரூ.14 கோடி அபராதம் வசூலாகி இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், 'போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 1.70 கோடி வழக்குகள் உள்ளன. அவற்றில் தற்போது 30 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.40 கோடி வழக்குகளுக்கும் விரைவில் தீர்வு காண்போம். வருகிற 11-ந் தேதிக்குள் வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்தினால் அவர்கள் 50 சதவீத சலுகையை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்