அரசு பஸ்களில் 10 ரூபாய் நாணயங்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்படும்; கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவிப்பு
அரசு பஸ்களில் 10 ரூபாய் நாணயங்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.
பெங்களூரு:
10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு தற்போது கடைக்காரர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். ரூ.10 நாணயம் பயன்பாட்டில் உள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தும் கூட ரூ.10 நாணயங்களை யாரும் வாங்குவது இல்லை. இந்த நிலையில் கர்நாடகத்தில் அரசு பஸ்களில் ரூ.10 நாணயங்களை வாங்க கண்டக்டர்கள தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி) வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரூ.10 நாணயங்களை பயன்படுத்துவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ரூ.10 நாணயங்கள், அனைத்து கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களிலும் கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.