நந்தி மலைக்கு ரோப்கார் வசதி; அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவு

நந்தி மலைக்கு ரோப்கார் வசதி ஏற்படுத்த அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-19 17:34 GMT

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். இதில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

கர்நாடகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாசார மேம்பாட்டில் சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றுகிறது. அதனால் சுற்றுலா தலங்களின் மேம்பாட்டிற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. பட்ஜெட்டில் அறிவித்தப்படி மைசூரு, பேளூர், ஹலேபீடு, ஹம்பி, பாதாமி, ஐஹொலே, பட்டதகல்லு ஆகிய சுற்றுதலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. முதல்கட்டமாக மைசூருவில் வருகிற தசரா விழாவுக்குள் அந்த வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள நினைவு சின்னங்களை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள தத்து திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரிய நிறுவனங்களுக்கு அதிகாரிகள் கடிதம் எழுத வேண்டும். நந்திபெட்டா, அஞ்சனாத்திரி, முல்லையன்கிரி தத்தாபீட மலைக்கு ரோப்கார் வசதி செய்யப்படுகிறது. இதற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை அதிகாரிகள் விரைவாக முடிக்க வேண்டும். கடற்கரையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கேடடுள்ளோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்