டெல்லியில் வசூல் ஏஜெண்டிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி கொள்ளை - போலீஸ் விசாரணை
வழிப்பறி நடந்த இடத்தின் அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
புதுடெல்லி,
டெல்லி நேதாஜி சுபாஷ் பிளேஸ் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் ஏஜெண்டாக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவர் நேற்று இரவு 9.30 மணியளவில் வடக்கு டெல்லியில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் ரூ.50 லட்சம் பணத்துடன் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ராஜேஷின் ஸ்கூட்டரை வழிமறித்து, அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக ராஜேஷ் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ராஜேஷ் பணத்தை எடுத்துச் செல்வதை அறிந்த யாரோ சிலர் இந்த வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.