இந்தியாவில் சாலை விபத்தால் ஏற்படும் மரணங்கள் - தமிழகம் 2-வது இடம்

இந்தியாவில் சாலை விபத்தால் ஏற்படும் மரணங்களில் உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளது.

Update: 2022-08-30 05:33 GMT

புதுடெல்லி,

கடந்த ஆண்டு, நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்த போக்குவரத்து விபத்துகளும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் அதன் அடிப்படையில், ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவண பிரிவு பதிவு செய்துள்ள தகவல்கள் அடிப்படையில், இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் 4 லட்சத்து 22 ஆயிரத்து 659 போக்குவரத்து விபத்துகள் நடந்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட (3 லட்சத்து 68 ஆயிரம்) அதிகம்.

இந்த விபத்துகள் மூலம், அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 24 ஆயிரத்து 711 பேர் மரணம் அடைந்துள்ளனர். 16 ஆயிரத்து 685 மரணங்களுடன் தமிழ்நாடு 2-ம் இடத்தை பிடித்துள்ளது. இது மொத்த மரணங்களில் 9.6 சதவீதம் ஆகும். 3-வது இடத்தில் மராட்டியம் உள்ளது.

தமிழ்நாட்டில் 2021-ம் ஆண்டு மட்டும் சாலை விபத்து வழக்குகள் 22.4% அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், 2020-ம் ஆண்டு 46 ஆயிரத்து 443 ஆக இருந்த போக்குவரத்து விபத்துகள் எண்ணிக்கை, 2021-ம் ஆண்டில் 57 ஆயிரத்து 90 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்