மிஸ் இந்தியா பட்டம் வென்ற 19 வயது இளம்பெண்
மிஸ் இந்தியா அழகி போட்டியில் குஜராத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ரியா சிங்கா மிஸ் இந்தியா பட்டம் வென்றார்.;
ஜெய்ப்பூர்
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 (Miss Universe India 2024) போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்திய அளவில் நடைபெறும் இந்த அழகிப் போட்டியில் வெற்றி பெறுபவர் உலக அளவிலான மிஸ் யுனிவர்ஸ் 2024 அழகி போட்டியில் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில் நேற்று நடைபெற்ற '' மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 '' இறுதிப் போட்டியில் குஜராத்தைச் சேர்ந்த ரியா சிங்கா வெற்றி பெற்றார்.
ரியா சிங்காவுக்கு போட்டியாக 51 பேர் கலந்துகொண்டுள்ளனர். தொடர்ந்து போட்டியில் வென்ற இவருக்கு "மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024" மகுடத்தை நடிகை ஊர்வசி ரவ்தேலா மகுடத்தை அணிவித்தார். இதனையடுத்து 19 வயதான ரியா சிங்கா நவம்பர் மாதம் மெக்சிகோவில் நடைபெறும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 அழகிப் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பேசிய ரியா சிங்கா,
நான் "மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டம் வென்றுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்த பட்டத்தை பெற கடினமான உழைத்துள்ளேன். இதற்கு முன்பு இந்த பட்டத்தை வென்றவர்களிடம் இருந்து நல்ல அனுபவம் கிடைத்தது எனக் கூறியுள்ளார். இந்த போட்டியில் பிரஞ்சல் பிரியா இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை சுஷ்மிதா ராயும் பிடித்தனர். இந்த போட்டியில் முன்னாள் "மிஸ் யுனிவர்ஸ் இந்தியா" பட்டத்தை வென்ற ஊர்வசி ரவ்தேலா நடுவராக பங்கேற்றார்.