பெங்களூரு செஷன்ஸ் கோர்ட்டில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல்

நேற்று தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற நிலையில் மீண்டும் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2024-05-03 11:50 GMT

பெங்களூரு,

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., பாலியல் புகாரில் சிக்கி உள்ளார். பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் தற்போது ஹாசன் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா, தேர்தல் முடிந்ததும் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். அவர் சென்ற பிறகுதான் அவரைப்பற்றிய ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுதொடர்பாக ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா டவுன் போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவாகி உள்ளது.

அதுபோல் பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டில் வேலை பார்த்த பெண்ணின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதே போலீஸ் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீதும், அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா மீதும் வழக்கு பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி.) போலீசார் விசாரித்து வருகிறார்கள்.இந்த நிலையில், ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப்பதிவு செய்துள்ளது. மாஜிஸ்திரேட்டு முன்பு பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்புணர்வுக்கான சட்டப்பிரிவும் எப்.ஐ.ஆரில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் , பெங்களூரு செஷன்ஸ் கோர்ட்டில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

நேற்று தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற நிலையில் இன்று மீண்டும் அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதாவது , மைசூர் கே.ஆர்.நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பான விஷயத்தை சுட்டிக்காட்டி ரேவண்ணா முன்ஜாமீன் கேட்டுள்ளார். இந்த மனு பெங்களூரு செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்