ஓய்வுபெற்ற ஆசிரியர் கழுத்தை அறுத்து படுகொலை

நஞ்சன்கூடுவில் ஓய்வுபெற்ற ஆசிரியரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-07-24 22:15 GMT

நஞ்சன்கூடு:

நஞ்சன்கூடுவில் ஓய்வுபெற்ற ஆசிரியரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓய்வுபெற்ற ஆசிரியர்

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா வருணா போலீஸ் எல்லைக்குட்பட்ட உம்மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 70). இவர் நஞ்சன்கூடு டவுனில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். நாகராஜ், நஞ்சன்கூடு டவுனிலேயே வசித்து வந்தார். மேலும் தனது சொந்த கிராமமான உம்மத்தூரில் விவசாய நிலமும் வாங்கி விவசாயம் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கம் போல விவசாய நிலத்துக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு நாகராஜ் சென்றார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நாகராஜை பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

கொலை

இதுகுறித்து வருணா போலீசிலும் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நாகராஜை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வருணா அருகே தேவலாபுரா பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக வருணா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மாயமான நாகராஜ் என்பது தெரியவந்தது. அவரை யாரோ மர்மநபர்கள் கழுத்தை அறுத்து கொைல செய்தது தெரியவந்துள்ளது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து வருணா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்