நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 5.55 சதவீதமாக உயர்வு...!

நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் அக்டோபர் மாதத்தை விட அதிகரித்துள்ளது.

Update: 2023-12-12 15:22 GMT

டெல்லி,

நவம்பர் மாதத்திற்கான நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 5.55 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இது கடந்த அக்டோபர் மாத சில்லறை வர்த்தக பணவீக்கமான 4.8 சதவீதத்தை விட அதிகமாகும்.

அதேபோல், நவம்பர் மாதத்திற்கான உணவுப்பொருட்கள் மீதான பணவீக்கம் 8.70 சதவீதமாக உள்ளது. காய், கனிகள் மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வு பண வீக்கத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

சில்லறை வர்த்தக பணவீக்கம் 5.55 சதவீதமாக அதிகரித்துள்ளபோதும், இது ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பான 6 சதவீதத்தை விட குறைவாகும்.

நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் அதிகரித்துள்ளதால் நாளை பங்குச்சந்தை சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்